[X] Close

உத்தராகண்ட்: 2 வாரத்துக்கும் மேலாக 65 கொரோனா மரணங்களை மறைத்த மருத்துவமனை

இந்தியா,கொரோனா வைரஸ்

Uttarakhand-Hospital-Hides-65-Covid-Deaths-For-Over-2-Weeks

கொரோனா வைரஸால் நிகழும் மரணங்களை, உத்தராகண்ட்டில் பல மருத்துவமனைகள் மறைப்பதாக புகார் எழுந்துள்ளன. மகா கும்பமேளாவுக்கு பிறகு, உத்தராகண்ட் அரசின் மீது கொரோனா அலட்சியம் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அம்மாநிலத்தை சேர்ந்த ஹரித்வாரிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட 65 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது.


Advertisement

இதுதொடர்பாக இன்று வெளிவந்திருக்கும் செய்தியில், கடந்த ஏப்ரல் 25 முதல் மே 12 வரையிலான காலத்தில் அம்மருத்துவமனையில், ஏறத்தாழ 65 பேர் கொரோனாவால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தரவுகள், அவர்கள் தகவல் தெரிவிக்கவேண்டிய டேராடூன் கொரோனா கட்டுப்பாடு மையத்துக்கு தெரிவிக்கப்படாமல் இருந்துள்ளது.

image


Advertisement

விஷயம் வெளிவந்து சர்ச்சையானதை தொடர்ந்து அம்மாநில அமைச்சகம் சார்பில் இதுபற்றி பேசியிருக்கும் சுபயோத் உனியால், ‘மருத்துவமனையின் இந்த தவறான நடவடிக்கைக்கு அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியுள்ளார். மாநிலத்திலுள்ள பிற மருத்துவமனைகளுக்கும் கொரோனா மரணங்களை, ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கு கண்டிப்பாக தெரிவிக்கப்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 15 பேருக்கு உத்தராகண்ட்டில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தெரியவந்திருப்பது, அங்கே கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தற்போது ஒருவர் இறந்தும் இருக்கிறார். அரசு விரைவில் சூழலை கட்டுக்கொள் கொண்டு வரவேண்டும் என்பதே அம்மாநில மக்களின் உச்சபட்ச கோரிக்கையாக இருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close