Published : 28,Jul 2017 05:29 AM

50 பேர் இணைந்து தயாரிக்கும் படம்

50-person-s-jointly-produced-Nedunalvadai

பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 பேர் இணைந்து தயாரிக்கும் படம், ’நெடுநல்வாடை’. 

படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் செல்வகண்ணன் கூறும்போது, ’மாறி வரும் நவீன யுகத்தில், நம் மண்சார்ந்த, கலாசாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அப்படியான ஒரு கிராமத்து வாழ்வியலை சொல்லும் படம் இது. நெல்லை மாவட்ட பின்னணியில் உருவாகிறது. என்னுடன் நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த, நண்பர்கள் 50 பேர் இணைந்து தயாரிக்கிறார்கள். தாத்தா- பேரன் பாசத்தை வைத்து உருவாகும் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். 70 வயது விவசாயியாக 'பூ’ ராமு நடிக்கிறார். இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி உள்பட பலர் நடிக்கிறார்கள்’ என்றார் . வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்