Published : 07,May 2021 11:53 AM

’திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ - வைரலாகும் முதல்வர் மு.க ஸ்டாலினின் டிவிட்டர் விவரம்

Tamilnadu-CM-MK-Stalin-s-twitter-details-goes-viral

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்கில் குறிப்பிட்டுள்ள சுய விவரங்கள் சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனக் கூறி உறுதிமொழி ஏற்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.  பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது தனிப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் என இணைத்துக்கொண்டார். மேலும், அவரது டிவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ள தனிப்பட்ட விவரங்களில் ’திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

image

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் இதே விவரங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் மாற்றியுள்ளார். தனது கவர் புகைப்படத்தையும் ‘இனி தமிழ் வெல்லும்’ என மாற்றியுள்ளார்.

image

ஏற்கெனவே ’#ChiefMinisterMKStalin’, ’#முகஸ்டாலின்_எனும்_நான்’ போன்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்