[X] Close

போராட அழைப்பு விடுத்ததாகக் கைது செய்யப்பட்ட மாணவருக்கு ஜாமீன்

bail-was-arrested-for-allegedly-calling-for-a-fight

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்ததாகக் கைது செய்யப்பட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் குபேரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


Advertisement

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டதாக குபேரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறி கடந்த 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கருத்துரிமையை பறிக்கும் வகையில் அரசு செயல்படுவதாகக் கூறி இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குபேரனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close