அப்துல் கலாம் மணி மண்டபத்தை திறந்து வைக்க ராமேஸ்வரம் வரவிருக்கும் பிரதமர் மோடி, மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க வழிவகை செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளார். இதனை வரவேற்றுள்ள மீனவர்கள், சில கோரிக்கைகளையும் முன்வைக்கின்றனர்.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதியாகக் கருதப்படும் பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பற்கான திட்டம் ஒன்றை பிரதமர் மோடி நாளை அறிமுகம் செய்து வைக்கிறார். அதன்படி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், பாக் நீரிணைப் பகுதியைத் தவிர்த்து, வேறு இடங்களில் மீன்பிடிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதனை வரவேற்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, இலங்கை கடற்படையிடம் படகைப் பறிகொடுத்த 6 மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. அத்தகைய மீன்பிடிப்புக்கு தேவையான படகின் விலை 80 லட்ச ரூபாயாகும். அதில், 56 லட்ச ரூபாயை மத்திய மாநில அரசுகள் மானியமாகவும், 16 லட்ச ரூபாயை வங்கிகள் கடனாகவும் வழங்கும். எஞ்சியத் தொகையான 8 லட்ச ரூபாயை மீனவர்கள் தங்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். ஆனால் அந்தத் தொகையை தங்களால் ஏற்பாடு செய்வது இயலாதது என்றும், அதனையும் வங்கியே கடனாகத் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
இது மட்டுமின்றி புதிய திட்டம் முற்றிலும் செயல்பாட்டுக்கு வர சில வருடங்கள் ஆகும் என மீனவர்கள் கூறுகின்றனர். அதுவரை பாக்நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Loading More post
எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது! #MorningMotivation #Inspiration
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix