[X] Close

மும்பை இன்டியன்ஸ் அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐபிஎல் திருவிழா

Mumbai-Indians-required-172-Runs-to-win-the-match-against-Rajasthan-Royals-of-the-League-Match-Number-24-of-the-Season

நடப்பு ஐபிஎல் சீசனின் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்துள்ளது. 


Advertisement

அந்த அணிக்காக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் 66 ரன்களுக்கு முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். பட்லர் 32 பந்துகளில் 41 ரன்களை குவித்து ராகுல் சாஹர் சூழலில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களத்திற்கு வந்தார். 


Advertisement

இருப்பினும் ஜெய்ஸ்வால் 20 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ராகுல் சாஹர் வசமே விக்கெட்டை இழந்தார். சஞ்சு சாம்சன் தன் பங்கிற்கு 27 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். தொடர்ந்து களத்திற்கு வந்த தூபேவுடன் 50 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் சஞ்சு. இருப்பினும் போல்ட் வேகத்தில் கிளீன் போல்ட் ஆனார் அவர். தூபேவும் 35 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.   

மில்லர் மற்றும் ரியான் பராக் இறுதி ஓவரில் 12 ரன்களை மட்டுமே எடுத்தது. அதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 172 ரன்களை எடுக்க வேண்டும். 

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியும் 171 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close