மே 2-ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கொரோனா இரண்டாம் அலை மே மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று வரும் செய்திகள் கவலையளிக்கிறது. கடந்த 10 ஆம் தேதி 5,989 ஆக இருந்த தொற்று தற்போது மூன்று மடங்கை தொடும் அளவுக்கு பரவுகிறது. ஒரே நாளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உலகின் முதல் நாடாக வந்திருப்பது இன்னொரு பக்கம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
மே 2-க்குப் பிறகு இன்னோர் ஊரடங்கைத் தாங்கும் நிலையில் மக்களும் - வாழ்வாதாரமும் இல்லை.
எனவே, காபந்து சர்க்கார் காலத்திலும் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் கையிருப்பு, தயார் நிலையில் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு #COVID19 பரவலைத் தடுத்திட வேண்டும். pic.twitter.com/XW2r1LYKl0— M.K.Stalin (@mkstalin) April 24, 2021Advertisement
கொரோனா முதல் அலையின் அனுபவங்கள் மூலம் தொலைநோக்குத் திட்டத்தை தயாரிக்க தவறியதே இரண்டாம் அலையின் தாக்குதல் தீவிரமானதற்கு காரணம். ஆக்ஸிஜன், தடுப்பூசி கையிருப்பை அதிகரிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
மே 2 ஆம் தேதிக்குப் பின் இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை. எனவே, இடைக்கால அரசு இருக்கும் ஒரு வாரத்தில், கொரோனா பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்