JUST IN

Advertisement

மூட்டை மூட்டையாக குட்கா: குடும்பத் தொழில் செய்த கும்பல் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடும்பத் தொழிலாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை சென்னை கொத்தவால் சாவடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பலிடம் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


Advertisement

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், குட்கா சப்ளை செய்யும் கும்பலான ஆந்திராவைச் சேர்ந்த அஞ்சுபாபு, கேரளாவைச் சேர்ந்த பவித்ரன், ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ஓட்டுனர் பால்ராஜ் ஆகியோரை கொத்தவால்சாவடி போலீசார் மாதவரத்தில் கைது செய்தனர். மாதவரத்தில் உள்ள அவர்களது குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து 30 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி, பெங்களூரில் இருந்து கண்டெய்னர் மூலமாக குட்காவை மூட்டை மூட்டையாக மாதவரத்திற்கு இவர்கள் வரவழைத்து வந்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளுக்கு மொத்தவியாபாரம்போல மூட்டை மூட்டையாக சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறினர். மேலும் கைதானவர்கள் குடும்பத் தொழிலாகவே இந்த குட்காவை மூட்டை மூட்டையாக சப்ளை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. கைதான 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement