'சரியாக விசாரித்து நடவடிக்கை எடுங்கள், எனக்கு வாழ பிடிக்கவில்லை' என கடிதம் எழுதி வைத்துவிட்டு மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கண்ணகி நகர், மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் நீலகண்டன் (50) என்பவர் அலுவலகத்தில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு பணிக்கு வந்தவர் காலையில் வெளியே வராததால் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சம்பவம் குறித்து கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கே.எம்.சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரது அறையிலிருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தனது இறப்பு குறித்து சரியாக விசாரித்து முடிவு எடுங்கள் எனவும், தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும் எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற போலீசார் விசாரணையில் வருவாய் மேற்பார்வையாளராக பணிபுரியும் ராஜா என்பவர் கோடிக்கணக்கில் பணத்தை கையாடல் செய்ததாகவும், ராஜாவை ஒரு மாதமாக பணியிடை நீக்கம் செய்திருப்பதாகவும், இது குறித்து உதவி பொறியாளரிடம் துறை ரீதியான விசாரணை செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
***
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Loading More post
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் இல்லாததே காரணமென கொதிக்கும் உறவினர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்