[X] Close >

’பிங்க்’ தெலுங்கு ரீமேக் ‘வக்கீல் சாப்’ ட்ரைலரை வெளியிட்ட போனி கபூர்!

pawan-kalyan-Vakeel-Saab-Trailer-released-

பவன் கல்யாண் நடிப்பில் ’பிங்க்’ தெலுங்கு ரீமேக்கான ’வக்கீல் சாப்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டிருக்கிறார்.


Advertisement

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பிங்க்’ வசூல் சாதனை செய்ததோடு இந்தியா முழுக்க விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டப் படம். இதனைதான், அஜித் நடிப்பில் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’யாக கொடுத்தார் தயாரிப்பாளர் போனிகபூர்.

image


Advertisement

இந்நிலையில், ‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன், அஞ்சலி, நிவேதா தாமஸ்,அனன்யா, பிரகாஷ் ராஜ் உள்ளீட்டோர் நடிக்கிறார்கள். ஸ்ரீராம் வேணு இயக்க தமன் இசையமைக்கிறார். பவன் கல்யாண் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று இப்படத்தின் ட்ரைலரை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டிருக்கிறார். வெளியான சில நிமிடங்களிலேயே 5 லட்சம் பேருக்கு மேல் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close