இந்திய கிரிக்கெட் அணியை 200 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வழி நடத்தி சென்ற மூன்றாவது கேப்டன் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலி. இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வழி நடத்தியதன் மூலம் இந்த மைல் கல்லை அவர் எட்டியுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி 127 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளும் இதில் அடங்கும்.
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 332 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தியுள்ளார். அதில் 178 போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. அதே போல அசாருதீன் 221 போட்டிகளில் இந்தியாவை வழி நடத்தி உள்ளார். அதில் 121 வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி 195 போட்டிகளில் இந்தியாவை வழி நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி