[X] Close >

Ind Vs Eng: மூன்றாவது பந்திலேயே விக்கெட்டை தூக்கிய புவனேஷ்வர் குமார்!

Team-India-Elected-to-chose-the-Field-and-Bhuvneshwar-Kumar-takes-the-wicket-of-Jos-Buttler

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டாவது டி20 போட்டியில், நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு கோலி அண்ட் கோ விளையாடி வருகிறது. இஷான் கிஷான் மற்றும் சூரிய குமார் யாதவ் இந்திய அணிக்காக அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர்.  


Advertisement

ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இங்கிலாந்து அணிக்காக ஜேசன் ராய் மற்றும் ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மூன்றாவது பந்தை எதிர்கொண்ட பட்லர் LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார். 

பவர் பிளே ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களை குவித்திருந்தது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close