[X] Close >

"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்

Mamata-Banerjee-Calls-PM-Dangabaaz-Says-Fate-Worse-Than-Trump-Awaits

‘அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்புக்கு நோ்ந்ததைவிட, பிரதமர் மோடியின் முடிவு மோசமாக இருக்கும்’ என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.


Advertisement

மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ஹூக்ளி மாவட்டம் சஹாகஞ்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

image


Advertisement

மம்தா பேசுகையில், ‘’பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும், வெறுப்புணர்வையும் பரப்பி வருகிறார்கள். பிரதமர் மோடி, இந்த நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதை விட மோசமான முடிவுதான் மோடிக்கு ஏற்படும். வன்முறையால் எந்த பலனையும் பெற முடியாது.

இந்த சட்டசபை தேர்தலில் நான் கோல் கீப்பராக செயல்படுவேன். பா.ஜ.க.வால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது. எந்த பந்தும் கோல் கம்பத்தை தொடாது. நிலக்கரி சுரங்க வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவியிடம் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது. இது, நமது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்’’ என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close