[X] Close >

“நமது கிரிக்கெட் ஹீரோ வசிம் ஜாபர் மீது மத முத்திரை குத்துவதா?” - மனோஜ் திவாரி வேதனை

Indian-Cricketer-Manoj-Tiwary-request-Uttarakhand-Chief-Minister-to-take-necessary-action-on-Wasim-Jaffer-Regional-based-Issue

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வசிம் ஜாபர் அண்மையில் உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். ஜாபர் உத்தராகண்ட் அணியில் வீரர்களை அவர்களது மதத்தின் அடிப்படையில் விளையாட தேர்ந்தெடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா. அதற்கு ஜாபர் மறுப்பு தெரிவித்திருந்தார்.


Advertisement

இந்நிலையில், ஜாபர் மீது குற்றம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என உத்தராகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி. 

அவர் இந்த கருத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 


Advertisement

“நமது தேசத்தின் கிரிக்கெட் ஹீரோக்களில் ஒருவரான வாசிம் ஜாபரை மதத்தின் பெயரால் உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் முத்திரை குத்தி புறந்தள்ளியுள்ளனர். இந்த விவகாரத்தில் உத்தராகண்ட் மாநில முதல்வரான நீங்கள் (திரிவேந்திர சிங் ராவத்) தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அது ஒரு உதாரணமாக அமைய வேண்டும்” என திவாரி தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close