[X] Close >

வெளியானது சாம்சங் A02 ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்ச விவரங்கள்

Samsung-A02-Smartphone-launched-in-Thailand-and-it-is-on-budget-Price

சாம்சங் நிறுவனத்தின் A02 ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் வெளியாகியுள்ளது. இப்போதைக்கு இந்த போன் தாய்லாந்தில் விற்பனையாகி வருகிறது. அங்குள்ள சாம்சங் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்த போன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ள இந்த போன் நிச்சயம் பெருவாரியான மக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

தாய்லாந்தின் பாட் கரன்சியில் இதன் விலை 2999 THB ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு உத்தேசமாக 7300 ரூபாய். 2ஜிபி ரேம்  மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் இடம்பெற்றுள்ளது. 3ஜிபி ரேம் போனின் விலையில் மாற்றம் இருக்குமாம். சர்வதேச சந்தையில் இந்த போன் எப்போது அறிமுகமாகும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. நான்கு வண்ணங்களில் இந்த போன் வெளியாகியுள்ளது. 

image


Advertisement

ஆண்ட்ராய்டு 10இல் இயங்கும் இந்த போனில் Infinity-V டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. 5000 மில்லியாம்ப் பேட்டரி, மைக்ரோ USB போர்ட் இதில் இடம்பெற்றுள்ளது.  13 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமரா இதில் பிரைமரி ஆப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close