அனைவரின் பாராட்டுக்களையும் வரவேற்பையும் குவித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும், அதே படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்த நடிகை நிரஞ்சனி அகத்தியனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு பெரிதும் பாராட்டுக்களைக் குவித்தது.
துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் என குறைந்த நடிகர்களை வைத்து மெகா ஹிட் படமாக்கினார், அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி.
இதில், கொள்ளையடிக்கும் பெண்ணாக ரக்ஷன் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார் நடிகை நிரஞ்சனி அகத்தியன்.இவர், அஜித் நடிப்பில் தேசிய விருது குவித்த ‘காதல் கோட்டை’ படத்தின் இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் மூத்த மகள் கிருத்திகா, இரண்டாவது மகள் நடிகை விஜயலட்சுமி, மூன்றாவது மகள் நிரஞ்சனி அகத்தியன். நிரஞ்சனி தற்போது திருமண பந்தத்துக்குள் நுழைய உள்ளார். இயக்குநர் தேசிங் பெரியசாமியை திருமணம் செய்யவுள்ளார் நிரஞ்சனி.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ??
கல்யாணம் !! ❤️@desingh_dp @Niranjani_Nini pic.twitter.com/eTqRd3xOFm — Thiru (@dir_thiru) January 26, 2021
இத்தகவலை, நிரஞ்சனியின் அக்கா கணவர் இயக்குநர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி