இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் நேற்று பெண் குழந்தை பிறந்தது. அந்த செய்தியை உற்சாக மிகுதியில் பகிர்ந்திருந்தார் விராட் கோலி.
இந்நிலையில் போர்வையால் சுற்றப்பட்ட பச்சிளம் குழந்தையின் கால்களை மட்டுமே வைத்து ‘WELCOME’ என அதில் எழுதி இருந்ததோடு ‘வீட்டுக்கு தேவதை வந்துள்ளாள்’ என கேப்ஷனும் போட்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி.
அதையடுத்து கோலி மற்றும் அனுஷ்காவின் ரசிகர்கள் அந்த பதிவை கொண்டாடி தீர்த்தனர். பலரும் கமெண்ட் பாக்சில் வாழ்த்து மழை பொழிந்திருந்தனர். சமூக வலைத்தளங்களிலும் கோலி-அனுஷ்கா தம்பதியர் மகளின் முதல் படம் என வைரலாக பகிர்ந்திருந்தனர்.
தொடர்ந்து அந்த படம் பொதுவான படம்தான். செய்தியை உங்களிடம் சொல்வதற்காக பகிர்ந்த படம் என இப்போது விளக்கம் கொடுத்துள்ளார் விகாஸ் கோலி. “விராட்டையும், அனுஷ்காவையும் வாழ்த்த நேற்று நான் பகிர்ந்திருந்தது பொதுவான படம்தான். அது கோலி - அனுஷ்கா தம்பதி மகளின் படம் அல்ல. இது தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதனால் எல்லோருக்கமான புரிதலுக்காக இதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்” என விகாஸ் இன்றைய பதிவில் சொல்லியுள்ளார்.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?