[X] Close >

''சித் ஸ்ரீராம்.. நீங்கள் எங்களுக்கு கிடைத்த பரிசு'' - மிஷ்கின் நெகிழ்ச்சி

Singer-Sid-Shriram-Gift-Us-mysskin

பாடகர் சித் ஸ்ரீராம் நமக்கு கிடைத்த பரிசு என இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.


Advertisement

image

பாலா தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்ததிரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் நிலையில், முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தில் பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார். இதற்காக அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து பாடிக்கொடுத்துள்ளார்.


Advertisement

இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் மிஷ்கின், “ பாடகர் சித் ஸ்ரீராம் பிசாசு -2 படத்திற்காக ஒரு மெலடி பாடலை பாடிக்கொடுத்துள்ளார். அவருக்கு மதிமயக்கும் ,ஆத்மார்த்தமான,மென்மையான குரல், அந்தக் குரல் எதையும் சிறப்பானதாக ஆக்கும். சித் ஸ்ரீராம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பரிசு” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

முன்னதாக இப்படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close