கார்த்திக் நரேன் இயக்கும் ‘தனுஷ் 43’ படத்தில் மீண்டும் குதூகலமூட்டும் பாடலுக்கான நடன பயிற்சியில் தனுஷ் ஜானி மாஸ்டருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’ஜகமே தந்திரம்’ விரைவில் வெளிவரவிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து, தனுஷின் 43 ஆவது படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின், மூன்று பாடல்களை முடித்துவிட்டதாக சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு குதூகலமூட்டும் பாடலுக்கான டான்ஸ் பயிற்சியில் தனுஷ் ஜானி மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை ஜானி மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “அடுத்த ட்ரெண்டிங் பாடலுக்கான நடனப் பயிற்சியில்” என்று ’தனுஷ் 43’ படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
’தனுஷ் 43’ மூலம் தனுஷ் – ஜானி மாஸ்டர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஜானி மாஸ்டர் தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குநராக இருக்கிறார். சமீபத்தில் வைரல் ஹிட் அடித்த ‘புட்ட பொம்மா’ பாடலின் நடன இயக்குநர் இவரே. தமிழில் முதன்முறையாக பிரபுதேவாவின் ’குலேபகாவலி’ படத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘குலேபா குலேபா’ பாடலுக்கு நடனம் அமைத்துதான் தமிழில் அறிமுகமானார் ஜானி மாஸ்டர்.
அந்த ஆண்டின் சிறந்த நடன இயக்குநருக்கான ‘ஆனந்த விகடன்’ விருது ஜானி மாஸ்டருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து தனுஷின் ’மாரி 2’ படத்தில் உலகம் முழுக்க கொண்டாடிய ’ரெளடி பேபி’ பாடலுக்கு பிரபுதேவாவுடன் நடனம் அமைத்தவரும் இவரே. இப்படாலின் நடன இயக்குநர்கள் பெயரில் ஜானி மாஸ்டர் பெயருக்கு அடுத்ததாகத்தான் பிரபுதேவாவின் பெயரே இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக, சிவகார்த்திகேயனின் ’நம்மவிட்டுப் பிள்ளை’ படத்தில் ‘காந்த கண்ணழகி’, தனுஷின் ’பட்டாஸ்’ படத்தில் ஜிகிடி கில்லாடி பாடலுக்கு நடனம் அமைத்து கவனத்தை ஈர்த்தவர், தற்போது தனுஷுடன் ஹாட்ரிக் வெற்றி கொடுக்க ‘தனுஷ் 43’ படத்தில் இணைந்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு