கார்த்திக் நரேன் இயக்கதில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘தனுஷ் 43’ படத்தில் திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார் பாடலாசிரியர் விவேக்.
கார்த்திக் சுப்பராஜின் ‘ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘அட்ராங்கி ரே’ படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘தனுஷ் 43’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘மாஃபியா’வில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், பிரசன்னா நடிக்க லைகா புரொடெக்ஷன் தயாரித்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதே கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் 2016இல் வெளியான ’துருவங்கள் 16’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், தனுஷின் 43 படம், கார்த்திக் நரேனுடன் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியானபோது எதிர்பார்ப்பு அதிகரித்தது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நேற்று பாடலாசிரியர் விவேக் இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார் என்று அறிவிப்பை படத்தை தயாரிக்கும் சத்யஜோதி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது விவேக்கின் முதல் படமாகும். ’ஷூட் த குருவி, ‘காதலே காதலே’, ’அடியே அழகே’, ‘ஏய் சுழலி’, ‘ஆளப்போறான் தமிழன்’, ‘நீதானே நீதானே’, ’சிம்டாங்காரன்’, ‘ஏய் கருப்பி’, ’மரணம் மாஸு மரணம்’, ‘வெய்யோன் சில்லி’. ‘என்னடி மாயாவி நீ’, ’சிங்கப்பெண்ணே’, ’வெறித்தனம்’, ‘ரகிட ரகிட’ உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு