வலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜித்!

Ajith-had-an-accident-during-the-shooting-of-Valimai

கடந்த ஆண்டு வெளியான ’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் ‘வலிமை’ மூலம் இணைந்துள்ளார்கள். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு பின்பு விதிமுறைகள் தளத்தப்பட்டன. அதனால், கடந்த மாதம் முதல் வலிமைப்படத்தின் ஷூட்டிங்  நடைபெற்று வந்தது.  இந்நிலையில்,10 நாட்களுக்கு முன்பு வலிமை அஜித்துக்கு படப்பிடிப்பில் நடிகர் அஜித்திற்கு சிறிய விபத்து ஏற்பட்டிருக்கிறது.


Advertisement

image

 ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஷூட்டிங்கில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்றில் அஜித்தின் கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜித் மீண்டும் படபிடிப்பில் கலந்துகொண்டு அவரது பகுதிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார்.


Advertisement

இதுகுறித்து  படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது இந்த சம்பவம் நடந்து 10 நாட்களாகி விட்டது எனவும்  அஜித் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, அஜித்துக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும், தன்னம்பிக்கையோடு நடித்து வருகிறார். தற்போது விபத்தில் சிக்கி இருப்பதால், அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement