டெல்லி: உணவுப் பொட்டலங்களில் கடவுள்களின் படங்கள்; ஹோட்டலுக்கு நோட்டீஸ்

delhi--Legal-notice-to-popular-Kerala-food-chain--Mahabelly--over-pictures-of-Hindu-gods-on-food-packets

கேரள உணவகமான மகாபெல்லியின் உரிமையாளர்களிடம் ஏற்கெனவே கோரிக்கை வைத்தும், உணவுப் பொட்டலங்களிலிருந்து கடவுள் படங்களை அகற்றத் தவறிவிட்டதாக மனுதாரர் பி.கே.டி நம்பியார் குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

image

புதுடெல்லியில் பிரபலமான கேரள உணவகம் மகாபெல்லிக்கு,  இந்து தெய்வங்களின் படங்களை உணவுப் பொட்டலங்களில் பயன்படுத்தியது தொடர்பாக மத உணர்வுகளை புண்படுத்தியதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பி.கே.டி நம்பியார் என்பவர், தெற்கு டெல்லியின் சாகேட், மந்திர் மார்க்கில் உள்ள மகாபெல்லி என்ற உணவகத்தின் உரிமையாளர்களான தாமஸ் ஃபென் மற்றும் சக்கரியா ஜேக்கப் ஆகியோருக்கு இந்த சட்ட அறிவிப்பை அனுப்பியுள்ளார்.


Advertisement

கேரளாவில் பக்தர்கள் கடவுளாகக் கருதும் தெய்யோமின் படம் உணவுப் பொட்டலத்தில் பயன்படுத்தப்பட்டது என்றும் அது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், உணவுப் பொட்டலங்களிலிருந்து கடவுளின் படங்களை அகற்றுமாறும் உணவகத்தின் நிர்வாகத்திடம் ஏற்கெனவே கேட்டதாகவும், ஆனால் உணவகத்தின் நிர்வாகம் அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் நம்பியார் கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement