கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரராகவும் மேட்ச் வின்னராகவும் ஜொலித்தவர் ஆஸ்திரலியாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல். நடப்பு சீசனில் அவரை ரூ.10.75 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
ஐ.பி.எல் போட்டிகளில் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்துவதற்காக எதிரணியினர் தனி வியூகங்கள் வகுத்த சீசன் எல்லாம் உண்டு. அந்த அளவிற்கு சிக்ஸர்கள் விளாசி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய மேக்ஸ்வெல், நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு சிக்ஸர்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 13 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், 9 பவுண்டரிகள் அடித்து, வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், சமீபத்தில் தனது சமூக ஊடக நிகழ்ச்சியான 'விரு கி பைதக்' கில் மேக்ஸ்வெல்லை தனது பாணியில் கடுமையாக கலாய்த்தார்.
ஐபிஎல் 2020 தொடரில் மோசமாக விளையாடிய ஐந்து வீரர்களை பட்டியலிட்டு பேசினார். மேக்ஸ்வெல்லில் ஒரு ஸ்வைப் எடுத்து, சேவாக் அவரை ரூ.10 கோடி சியர் லீடர் என்று அழைத்தார். தான் ஒரு விலை உயர்ந்த சியர்லீடர் என்பதை நிரூபித்து விட்டார். ஐபிஎல் 2020 ஆம் ஆண்டில் மேக்ஸ்வெல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 'அதிக ஊதியம் பெறும் விடுமுறையை' அனுபவித்ததாக சேவாக் கலாய்த்து தள்ளினார்.
Loading More post
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?