இந்தியா முழுக்க வசூல் சாதனை செய்த ’கே.ஜி.எஃப் 2’ படத்தின் டீசர் நடிகர் யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என்று, அப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கெளடா மறைமுகமாக ட்விட்டர் கேள்வி பதிலில் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப்’ இந்தியா முழுக்க வசூல் சாதனை செய்ததால், அதன் இரண்டாம் பாகத்தை அறிவித்தது படக்குழு.
சஞ்சை தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 இந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால், படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. சமீபத்தில் ஷூட்டிங் நடத்த மத்திய அரசு விதிமுறைகளைத் தளர்த்தியதால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ஷூட்டிங் தொடர்ந்தது. அதில், பிரகாஷ் ராஜின் பகுதிகள் எடுக்கப்பட்டன. தற்போது, யஷ் மற்றும் சஞ்சய் தத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்படவுள்ளது.
Teaser bidi bro shooting Yavagan mugsii?
Teaser Bitre 1 month adunne enjoy madtivi? — AbhiYash™ (@abhi_yash8055) November 4, 2020
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கெளடாவிடம், யஷ் ரசிகர் ஒருவர், ‘படப்பிடிப்பு முடிந்துவிட்டதா? டீசர் எப்போது வெளியாகும்?’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள கார்த்திக் கெளடா
Eega bitre birthday time ge mathe keltheera... Aa time alle kodteevi bidi. — Karthik Gowda (@Karthik1423) November 4, 2020
“டீசரை இப்போதே வெளியிட்டால், நீங்கள் மற்றொரு அப்டேட்டைக் கேட்பீர்கள். அதனால், யஷ் பிறந்தநாளில் ஒரு அப்டேட் கொடுப்போம்” என்று சூசகமாக பதிலளித்துள்ளார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி