ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 55வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக பிலிப்பி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். பிலிப்பி 12 ரன்களில் வெளியேற படிக்கல் தொடர்ந்து சீரான வேகத்தில் ரன் வேட்டையில் ஈடுபட்டார். அவருக்கு கேப்டன் விராட் கோலி ஒத்துழைப்பு அளித்தார். இந்த கொஞ்சம் நிதானமாகவே விளையாடியது. இறுதியில் அடித்துக் கொள்ளலாம் என நினைத்து பொறுமையாக விளையாடியிருக்கலாம்.
ஆனால், விராட் கோலி 29(24) ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த கையோடு நடையைக் கட்டினார் படிக்கல். கிறிஸ் மோரிஸும் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஏபி டிவில்லர்ஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோர் 150-ஐ எட்ட உதவினார். துபேவும் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணி சார்பில் நோர்ட்ஜ் 3 விக்கெட் சாய்த்தார். ரபாடா 2 விக்கெட் எடுத்தார். அஸ்வின் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினாலும் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.
.@KKRiders fans, are you watching #DCvRCB closely? ? https://t.co/b90di459DF #IPL2020 pic.twitter.com/ggzekouAez— ESPNcricinfo (@ESPNcricinfo) November 2, 2020
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தானாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். அத்துடன் முதல் இரண்டு இடங்களிலும் சென்றுவிடும். பெங்களூர் அணி தோற்றாலும் அதற்கு ஒரு வாய்ப்பு இப்போதும் இருக்கிறது. அதாவதும் 17.3 ஓவர்களில் டெல்லி அணி இந்த இலக்கை எட்டாமல் தடுத்துவிட்டால் போதுமானது. ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி