டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு - மேலும் 26 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் மேலும் 26 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது


Advertisement

ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதியவர்கள் முதல் நூறு இடங்களை பிடித்தது எப்படி என கேள்வி எழுந்து சர்ச்சை வெடித்தது. குரூப் 4 தேர்வில் அனைத்து முன்னிலை ரேங்க்குகளையும், ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதியவர்களே பெற்றிருப்பதால், இந்த மையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இதனை அடுத்து டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு விசாரணைக்கு வளையத்துக்குள் வந்தது. சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் 20 பேரை சிபிசிஐடி கடந்த வாரம் கைது செய்தது. தற்போது மேலும் 26 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ, குரூப்4, விஏஓ தேர்வு முறைகேடுகளில் இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேரை சிபிசிஐடி தேடி வருகின்றனர்


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement