’’அனைவரையும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது’’ - விஜய் தேவரகொண்டா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அர்ஜுன் ரெட்டி, டியர் காம்ரேட் போன்ற தெலுங்கு திரைப்படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. ஆன்லைனில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தேவரகொண்டா, நமது நாட்டின் அரசியல் நிலைகுறித்தும் பேசியுள்ளார்.


Advertisement

அதில், ‘’எனக்கு அரசியலுக்கு வரும் அளவிற்கு பொறுமை இல்லை. மேலும் அனைவரையும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. காரணம், பணத்தையும், மதுவையும் வாங்கிக்கொண்டு வாக்களிக்கிறார்கள். வெறும் பணக்காரர்கள்தான் வாக்களிக்கவேண்டும் என நான் சொல்லவில்லை. நடுத்தரவர்க்கத்தினரும், படித்தவர்களும், சொற்ப பணத்துக்கு மயங்காதவர்களும் கண்டிப்பாக வாக்களிக்கவேண்டும். அதனால்தான் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என நான் சொல்கிறேன்.

ஏனென்றால், பலருக்கும் தான் யாருக்கு வாக்களிக்கிறோம், எதற்கு வாக்களிக்கிறோம் என்றே தெரிவதில்லை. விமானத்தில் அனைவரும் ஏறிப்போகலாம். ஆனால் அனைவராலும் விமானி ஆகமுடியாது. அதுபோலத்தான் அரசியலும். இதுபோன்ற அரசியலுக்கு சர்வாதிகாரமே மேல்’’ என்று விளக்கமளித்துள்ளார்.


Advertisement

’நான் இந்தியை வெறுக்கவில்லை’ -இந்தி எதிர்ப்பு டிஷர்ட் குறித்து யுவன் விளக்கம் 

தற்போது, இந்தி நடிகை அனன்யா பாண்டேவுடன், விஜய் தேவராகொண்டா இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement