புதிய வாழ்க்கைக்குள் செல்ல உள்ளோம் - திருமண தகவலை உறுதி செய்த காஜல் அகர்வால்

Actress-Kajal-Agarwal-getting-married-on-October-30

நடிகை காஜல் அகர்வால் மும்பையைச் சேர்ந்த உள்வடிவமைப்பு தொழில்நுட்ப வல்லுநரும், தொழிலதிபருமான கௌதம் கிட்சுலுவை காதலித்து வருவதாக தகவல்கள் பரவிவந்தன. மேலும் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.


Advertisement

அதை உறுதிசெய்யும் வகையில், காஜல் தனக்கு வரும் 30ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ‘’கௌதம் கிட்சுலுவை அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். இதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி. மும்பையில் நடைபெறவுள்ள திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்குபெற உள்ளனர்.


Advertisement

இந்த பொதுமுடக்கம் எங்கள் வாழ்வில் ஒரு வெளிச்சத்தை கொண்டுவந்துள்ளது. ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்குவதற்கு பதட்டமாக இருக்கிறது. உங்களுடைய அன்புக்கு நன்றி. புதிய வாழ்க்கைக்குள் செல்லவிருக்கும் எங்களுக்கு உங்களின் ஆசி தேவை’’ என்று கூறியுள்ள அவர், திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பை தொடரப்போவதாகக் கூறியிருக்கிறார்,

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement