நெல்லை: தவறான சிகிச்சையால் பிறந்த குழந்தையின் கை வளைந்து பாதிப்பு - பெற்றோர் புகார்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்த குழந்தையின் கை வளைந்து பாதிப்படைந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூரை சேர்ந்தவர் நம்பீஸ்வரி. இவர் ஈரோட்டை சேர்ந்த ராஜா என்பவரை திருமணம் செய்த நிலையில் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 18-ம் தேதி அன்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக கூறி குழந்தையை மருத்துவர்கள் இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வந்துள்ளனர்.


Advertisement

அதன் பின்னர் 3 நாட்கள் கழித்து பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்கும் போது கையில் கட்டு போட்டு இருப்பது தெரியவந்தது. அது குறித்து கேட்டபோது ஊசி போட்டதில் ஏற்பட்ட அலர்ஜி என்றும் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் தான் குழந்தை கை மிகப்பெரிய பாதிப்புடன் இருந்ததை தாய் நம்பீஸ்வரி கவனித்துள்ளார். தொடர்ந்து மூன்று வாரம் ஸ்கேன் செய்து பார்த்தும் குணமாகவில்லை.

பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த ஒரு சில நாளில் குழந்தை கையில் இருந்த புண் சரியான நிலையில் குழந்தைக்கு ஒரு கை வளைந்து விட்டது என மருத்துவர்கள் கூறினர்.  இதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.


Advertisement

image

தனது குழந்தையின் கை பாதிப்படைந்ததற்கு அரசு மருத்துவமனை பணியாளர்களின் அலட்சிய போக்கும் தவறான சிகிச்சையுமே காரணம் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாய் நம்பீஸ்வரி தனது தாயுடன் குழந்தையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து முறையிட்டார். மேலும் மேல் சிகிச்சைக்கு வசதி இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நம்பீஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement