திருவாரூரில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க மூன்று ஆண்டுகள் காலம் நீடிப்பு அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் எண்ணெய் கிணற்றை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Advertisement

image
திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 24 இடங்களில் எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கு கடந்த 2013ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. அவற்றில் பதினாறு எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 8 எண்ணெய்க் கிணறுகள் அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

 image


Advertisement

இதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அணுகி இருந்த நிலையில் வருகிற 2023 ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை 3 ஆண்டுகள் கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் காரியமங்கலம் கிராமத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணற்றை முற்றுகையிட்டு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 image

தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கும் நிலையில் மத்திய அரசு அதனை தடுக்கும் விதமாக ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மாநில அரசு ஒருபோதும் எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement