தூய்மை பணியாளர் மேற்பார்வையில் பிரசவம்: இறந்துபோன குழந்தை.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரபிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளர் மேற்பார்வையில் பிரசவம் நடைபெற்றதில் குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Advertisement

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூய்மை பணியாளர் ஒருவரின் மேற்பார்வையில் பிரசவம் நடந்துள்ளது. இதில் குழந்தை இறந்துவிட்டது. இந்நிலையில், அவர்களிடம் இருந்து பணத்தையும் மருத்துவமனை நிர்வாகம் வசூல் செய்துள்ளது.

image


Advertisement

இதனை அடுத்து குழந்தையின் தந்தை முதலமைச்சர் அலுவலகத்திற்கு இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து இரண்டு அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது ஆய்வின் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மீரட் மாவட்ட நீதிபதி இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், இது ஒரு முக்கியமான பிரச்னை. இது குறித்து மாநில அரசு தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement