நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, சீப்பு மாதிரியான பொருட்கள் உருவான கதை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விக்கிரமாதித்தனை துரத்தி துரத்தி கதை சொல்லும் வேதாளத்தைபோல நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் உருவாக வெவ்வேறு வகையான கதை உள்ளது. 


Advertisement

சோப்பு, சீப்பு, டூத் பேஸ்ட், பிரெஷ் என நீண்டு கொண்டே இருக்கும் அன்றாட பொருளுக்கு பின்னால் உள்ள கதையை கொஞ்சம் பார்க்கலாம். 

image


Advertisement

சீப்பு 

நம் தலைமுடியை வாரி சீவுவதற்கு பயன்படுத்தி வரும் சீப்பை சரியாக ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கெண்டினேவியா நாட்டை சேர்ந்த பழங்குடி மக்கள் உருவாக்கியுள்ளனர். 

முழுவதும் விலங்குகளின் எலும்புகளை மட்டுமே வைத்து உலகின் முதல் சீப்பை வடிவமைத்தது அவர்கள் தான். அதனைத்தொடர்ந்து அழகை பேணி காப்பதில் அதிக ஆர்வம் கொண்ட எகிப்திய நாட்டினர் யானையின் தந்தங்களையும், சந்தன மரங்களையும் கொண்டு சீப்புக்கு மறுவடிவம் கொடுத்துள்ளனர். 


Advertisement

அப்படி படிப்படியாக பல பரிணாம வளர்ச்சி பெற்ற சீப்பு கடைசியாக 19ஆம் ஆண்டில் பிளாஸ்டிக்கை மூல பொருளாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 

image

சோப்பு கட்டிகள் 

மனித நாகரிகம் மெல்ல மெல்ல வளர்ந்து வந்த பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியாவை சேர்ந்த அரச குடிகள் சோப்பு கட்டிகளை பயன்படுத்தி துணிகளை துவைத்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மிருகங்களின் கொழுப்புகள் மற்றும் எரிந்து போன சந்தன மர கட்டைகளின் சாம்பலை கொண்டு அந்த சோப்பு கட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

அதன் பின்னர் மென்போடோமியாவை சேர்ந்த மக்கள் பொட்டாஷியம் மற்றும் சில எண்ணெய் வகைகளை பயன்படுத்தி திரவமாக சோப்பை பயன்படுத்தியுள்ளனர். 

அதனைத்தொடர்ந்து ஹெப்ரூ இன மக்கள் செடி, கொடிகளின் வேர்களை கொண்டு ஆயுர்வேத முறையில் சோப்பு கட்டிகளை உருவாக்கியுள்ளனர். அதன் பின்னர் பல மாற்றங்களை பெற்று வந்த சோப்பு கட்டிகளை காய்கறி எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு மற்றும் சில செயற்கை திரவங்களை பயன்படுத்தி சோப்பை திரவமாகும், கட்டிகளாகவும் ஐரோப்பியர்கள் உருவாக்கி சந்தைப்படுத்தியுள்ளனர். இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான சோப்பு கட்டிகள் அனைத்தும் ஐரோப்பியர்கள் உருவாக்கிய பார்முலாவின் படி தான் உற்பத்தியாகி வருகிறது.

image

 

டூத் பிரெஷ்

தற்போது நாம் பல் துலக்க பயன்படுத்தி வரும் டூத் பிரெஷ்கள் உருவாவதற்கு முன்னர் நம் முன்னோர்கள் ஆலங்குச்சி மற்றும் வேப்ப மர குச்சிகளை டூத் பிரெஷ்ஷாக பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போதும்  கூட ஒரு சிலர் அந்த பழக்கத்தை கடைப்பிடித்து வருவதுண்டு. இருப்பினும் அதற்கு மாற்று காண விரும்பிய ஐரோப்பா, ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள் பறவைகளின் இறகையும், விலங்குகளின் எலும்புகளையும் கொண்டு பரிசோதனை முயற்சியாக பல் துலக்கியுள்ளனர். 

கால ஓட்டத்தில் அந்த பரிசோதனை முயற்சி பல்வேறு வளர்ச்சியை பெற்று தற்போது நாம் பயன்படுத்தி வரும் டூத் பிரெஷ்ஷின் முதல் மாதிரியை சீனாவை சேர்ந்தவர்கள் தான் வடிவமைத்துள்ளனர். பன்றிகளின் கடினமான தோலை கொண்டு டூத் பிரெஷ் அப்போது உருவாக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக இங்கிலாந்தை சேர்ந்த வில்லியம் அடிஸ் என்பவர் முதன்முதலாக டூத் பிரெஷ்ஷை வணிக நோக்கத்தோடு சந்தைப்படுத்த அது வைரல் ஹிட்டாகி தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் டூத் பிரெஷ்கள் பிளாஸ்டிக் மற்றும் பைபர் இழைகளால் உற்பத்தியாகி வருகிறது.

image 

டூத் பேஸ்ட் 

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் தங்களது பற்களை சுத்தப்படுத்த பற் பசை என சொல்லப்படும் டூத் பேஸ்டை உருவாக்கியுள்ளனர். அவர்களது வழியை பின்பற்றி கிரேக்கம், ரோமாபுரி, சீன மக்களும், இந்தியர்களும் டூத் பேஸ்டை  பயன்படுத்தியுள்ளனர். பேரண்டத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பழங்காலத்தில் டூத் பேஸ்டை உருவாக்க வெவ்வேறு பார்முலாவை பின்பற்றியுள்ளனர். 

படிக கற்கள், எருதுகளின் எச்சங்கள் மற்றும் எரிந்து போன முட்டை ஓடுகள் என பல பொருட்களை மூலமாக வைத்து டூத் பேஸ்டை உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர். குணசிங்கி வேர், புதினா மற்றும் உப்பை பயன்படுத்தி டூத் பேஸ்ட் உருவாக்கியுள்ளனர். 

அப்படி உருவாக்கப்பட்ட டூத் பேஸ்ட்கள் 1850 ஆம் ஆண்டு வரை பற் பொடிகளாக தான் இருந்துள்ளன. அதன் பின்னர் தான் திரவ வடிவில் ‘க்ரீம்களாக’ டூத் பேஸ்ட்கள் உருவாக்கப்பட்டு சந்தை படுத்தப்பட்டுள்ளன. தற்போது நாம் பயன்படுத்தி வரும் டூத் பேஸ்ட்கள் அனைத்துமே சீனர்கள் உருவாக்கிய பார்முலாவை கொண்டு தான் உற்பத்தியாகிறது. 

1873ல் டூத் பேஸ்ட்களை ‘கோல்கேட்’ நிறுவனம் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் சந்தைப்படுத்த துவங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

image

பேனா 

சங்ககாலங்களில் வாழ்ந்த  அரசர்களும், புலவர்களும் பறவைகளின் இறக்கைகளையும், இயற்கை மைகளையும் கொண்டு கடிதம் எழுதும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். எரிந்து போன கரிக்கட்டைகளை துகள்களாக்கி நீரோடு சேர்த்து மையாக உருவாக்கி எழுத பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கும் முன்னர் எழுத்தாணிகளை பயன்படுத்தி எழுதியதாகவும் ஆய்வுகள் கூடுகின்றனர்.

அப்படியிருந்த எழுது கோளை 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் புதுமைக்கு பெயர்போன ஐரோப்பியர்கள் உலோகங்களை கொண்டு பேனைவை தயாரித்துள்ளனர். அதன் பின்னர் இங்க் கொண்டு எழுத பயன்படும் பேனாவுக்கு தேவையான  உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட நிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜான் மிட்செல், பார்க்கர், ஜான் லவுட் மாதிரியானவர்கள் பேனாவை சந்தைப்படுத்தியதில் முக்கியமானவர்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement