கோயம்பேடு காய்கறி சந்தையை மீண்டும் திறக்கலாமா ? இன்று ஆய்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.


Advertisement

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சந்தை மூடப்பட்டு, காய்கறி சந்தை திருமழிசையில் செயல்பட்டு வருகிறது.

image


Advertisement

தற்போது சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்யவுள்ளார். பின்னர் வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement