[X] Close

16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை கொடூரம் : இஸ்ரேலில் மக்கள் போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இஸ்ரேல் நாட்டிலுள்ள எய்லாட் நகரின் செங்கடல் ரிசார்ட்டில் 16 வயதுடைய சிறுமியை 30 ஆண்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமையான சம்பவம் இஸ்ரேலில் பெரும் போராட்டங்களை தூண்டியுள்ளது.


Advertisement

image

பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த வாரம் எய்லாட் போலீஸாரிடம் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார், ஆனால் இந்த வழக்கு முன்னர் பெரிதும் கவனிக்கப்படவில்லை. மக்கள் போராட்டங்கள் வெடித்த பிறகு "எய்லாட்டில் 16 வயது சிறுமி வன்கொடுமை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் மிக்கி ரோசன்பீல்ட் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.


Advertisement

வியாழக்கிழமை மாலை டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் ஆகிய பெரிய நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இஸ்ரேலின் தலைவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசத்தொடங்கினர். "இந்தச் சமபவம் அதிர்ச்சியளிக்கிறது, சொல்வதற்கு வேறு வார்த்தை இல்லை சந்தேக நபர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இது ஒரு இளம் பெண்ணுக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும் " என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

மகளிர் உரிமைகள் குழுவான ஹாஸ்டிக்கேரியட்டின் நிர்வாகி இலானா வெய்ஸ்மேன் “ ஐந்தில் ஒரு இஸ்ரேலிய பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகவும், தினமும் 260 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நாட்டில் பதிவாகின்றன” என்றும் கூறினார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement