[X] Close >

கணவனை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி!!

Wife-and-husband-s-brother-arrested-for-killing-husband-in-Pondicherry

புதுச்சேரியில் திருமணத்தை மீறிய உறவால் கணவனை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் கணவரின் தம்பியையும் போலீசார் கைதுசெய்தனர்.


Advertisement

image

புதுச்சேரி முதலியார்பேட்டை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (32). இவரது மனைவி கவுசல்யா. கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.


Advertisement

இந்த நிலையில் தலை மற்றும் முகம் பகுதியில் ரத்த காயங்களுடன் கோபிநாத், வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

image

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கோபிநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபிநாத்தின் தம்பி உறவுமுறையான சித்தப்பா மகன் கார்த்தி என்பவருக்கும், கவுசல்யாவுக்கு தொடர்பு இருந்துள்ளது.


Advertisement

இதை கோபிநாத் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கார்த்தி, சரமாரியாக தாக்கியதில் கோபிநாத் இறந்து போனார். இதனால் போலீசில் இருந்து தப்பிக்க கோபிநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று கார்த்திகும் கவுசல்யாவும் நாடகமாடி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து முதலியார்பேட்டை போலீசார், இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close