[X] Close

இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்: எதற்காக இந்நாள் தெரியுமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்று (ஆகஸ்ட் 13) சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினம். இந்த தினம் கொண்டாடப்படுவதன் காரணம் குறித்து விளக்குகிறார், அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.


Advertisement

image

* ஒவ்வொரு நூறு பேருக்கு ஒருவர் 'SINSTRALITY' எனும் இடக்கை பழக்கம் கொண்டவராக இருக்கிறார்.


Advertisement

* இடது கை பழக்கம் என்பது தனித்திறமை அன்று. அதனால் அவருக்கு தனிப்பட்ட அறிவு, மேதாவித்தன்மை இருக்கும் என்று நம்பப்படும் செய்திகள் அனைத்தும் மூடநம்பிக்கையே.  

* எப்படி வலது கை பழக்கம் என்பது இயற்கையானதோ, எவ்வித தனிப் பயிற்ச்சியும் இன்றி தானாக அமைவதோ, அதே போன்று இடது கைப்பழக்கமும் தானாக அமைவது.

* குழந்தை எந்தக் கையில் பெரும்பான்மை வேலைகளை செய்ய இருக்கிறது என்பது அதன் மூன்று வயதிற்குப்பிறகு முடிவாகும்.


Advertisement

* இடது கை பழக்கம் அதற்கு இருந்தால் அதுவே அதன் இயற்கை என்று அப்படியே விட்டுவிட வேண்டும். அதை அடித்து உதைத்து வலது கைக்கு மாற்ற முயற்சி செய்யக்கூடாது. அது தேவையற்றது

* இடது கைக்காரர்களுக்கு வலது கைகக்காரர்களிடம் இருந்து நேர் எதிர் நோக்குநிலை (Orientation) இருக்கும்

* வலது கைக்காரர்கள் ஒரு மாதிரி புத்தகத்தை வைத்து எழுதினால், இடது கைக்காரர்கள் அதற்கு நேர் எதிராக புத்தகத்தை வைத்து எழுதுவார்கள்.

* வலது கைக்காரர்களுக்கு ஒரு செயலைச் செய்ய வலது கை முந்திச்செல்லும். அதுவே இடக்கைக்காரர்களுக்கு இடது கை முந்திச்செல்லும்.

 image

* இடது கைக்காரர்களுக்கு வலது பக்க மூளையின் மூலம் பெரும்பான்மையான செயல்பாடுகள் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் சிந்தித்தல் திறன் / கற்றல் திறன் / நினைவாற்றல் / கலைத்திறன் போன்றவை சிறிது அதிகமாக இவர்களிடம் காணப்படுவது இந்த வகைக்காரர்களுக்கு இயற்கையான அட்வாண்டேஜ் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன

மேலும் இந்த தினம் கொண்டாடப்படுவதன் காரணம் யாதெனில், வலது கைக்காரர்கள் பெரும்பான்மை வசிக்கும் உலகில்  கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுமே வலது கைக்காரர்களுக்கு என வடிவமைக்கப்படுகின்றன. இதைக் கையாள்வதில் இடக் கைக்காரர்களுக்கு உள்ள பிரச்சனைகளை பெரும்பான்மை சமூகமும் உணர வேண்டும் என்பதே இந்த நாளைய நோக்கமாகும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement