[X] Close

SBI வங்கியில் வேலைவாய்ப்பு: முழு விவரம்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவின் புகழ்பெற்ற பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சர்க்கிள் ஆபீசர் எனப்படும் வட்ட அதிகாரி பணிகளுக்குத் தேவையான தகுதியும் விருப்பமும் கொண்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Advertisement

தமிழகம் உள்பட குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா (மும்பை தவிர) ஆகிய மாநிலங்களில் 3850 அதிகாரிப் பணியிடங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 550 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 

கல்வித்தகுதி
ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும். பொதுப்பிரிவினர் 1.8. 2020 ஆம் தேதியன்று முப்பது வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வரையில் உள்ளூர் மொழியில் பரிச்சயம் பெற்றிருக்கவேண்டும். அதற்கான சான்றுகளை சமர்ப்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Advertisement

வணிக வங்கிகள் அல்லது கிராமப்புற வங்கிகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரிகள் அளவில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம்.

பட்டியலினத்தவர்களுக்கு 5 ஆண்டுகளும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளில் பட்டியலினத்தவர்களுக்கு 15 ஆண்டுகளும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 13 ஆண்டுகளும் பொதுப்பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் விலக்கு உண்டு.

image
விண்ணப்பிக்கும் முறை


Advertisement


இணையதளத்தில் ஜூலை 27 ஆம் தேதி விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன்னர் தேவையான கல்வித்தகுதியை அடைந்திருக்கவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 750. பட்டியலினத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். வேறு முறைகளில் விண்ணப்பம் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் வழியாக செலுத்தலாம். தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வட்ட அதிகாரிப் பணிகளுக்கு பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை, சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை வங்கியின் பிரத்யேக இணையதளத்தில் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 16.8.2020

விவரங்களுக்கு: www.sbi.co.in/careers

 

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement