‘வாழ்நாளில் சிறந்த பரிசு கொடுத்த உனக்கு நன்றிகள்’ ஹர்திக் பாண்டியா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போதிலிருந்தே சமூக வலைத்தளத்தில் தான் தந்தையான விஷயத்தை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாடி வருகிறார் அவர். 


Advertisement

image

இந்த சூழலில் அவரது இணையர் நடாஷா ஸ்டான்கோவிக் உடன் இருக்கின்ற படத்தை நேற்று பகிர்ந்த அவர் ‘என் வாழ்நாளில் சிறந்த பரிசு கொடுத்த உனக்கு நன்றிகள்’ என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார். கூடவே ‘என் ரோஜாவுக்காக பூத்த ரோஜாக்கள்’ எனவும் சொல்லியுள்ளார். 


Advertisement

அதற்கு ‘லவ் யூ’ என ரிப்ளை கொடுத்துள்ளார் நடாஷா. 

கடந்த  வியாழன் அன்று ‘ஆண் குழந்தையினால் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளோம்’ என பகிர்ந்திருந்தார் ஹர்திக் பாண்டியா.

image


Advertisement

தொடர்ந்து தனது குழந்தையின் படத்தையும் கடந்த சனிக்கிழமை அன்று பகிர்ந்திருந்தார். அதோடு பிறந்த குழந்தைக்காக ஷாப்பிங் செய்த பொருட்களையும் பகிர்ந்தார் அவர். நடாஷாவும், ஹர்திக் பாண்டியவும் கடந்த ஜனவரி மாதம் என்கேஜ்மென்ட் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

காயம் காரணமாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் பாண்டியா அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக பட்டையை கிளப்ப உள்ளார். 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement