’உங்கள் தடம் பதிக்க காத்திருக்கிறது மதுரை மாநாடு’!! மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் அஜித் குமாரை தடம் பதிக்க காத்திருக்கும் மாபெரும் மதுரை மாநாடு என அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு - அரசியல் பிரவேச மாநாடு என்பது போல் போஸ்டரில் சூசகம்.


Advertisement

தமிழகத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித், கார் பந்தயம், அறிவியல் கண்டுபிடிப்பு, துப்பாக்கி சுடுதல் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர். அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட நடிகர் அஜித்குமாருக்கு தமிழகம் முழுவதும் அதிகமான ரசிகர் மன்றங்களும் உள்ளன.

image
ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமார் திரையுலகத்தில் கால் பதித்து 28 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே சினிமா சார்ந்த எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. இருந்தாலும் கலைஞர் முதல்வராக இருந்தபோது நடிகர் அஜித்குமார் மேடையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி பலரின் பாராட்டை பெற்றது.


Advertisement

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரை சுற்றியும் அரசியல் பிரவேசம் எனும் கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டது. அதில் அரசியல் பேசும் ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மேடையில் பேசும்போது, அது சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் அஜித்குமாரின் செயல்கள் மற்றும் குணங்களை முன்னுதாரணமாக கூறி பல அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களும் பாராட்டி உள்ளனர்.

image

இப்போத நடிகர் அஜித்குமார் அவர்களை தடம் பதிக்க காத்திருக்கும் மதுரை மாநாடு என அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

    image

ஏற்கனவே நடிகர் கமல் முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்தியுள்ளார், அதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து அரசியல் பயணம் செய்ய நடிகர் ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது நடிகர் அஜித்தை மையப்படுத்தி மாபெரும் மதுரை மாநாடு என நடிகர் அஜித்குமாரின் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்யும் வகையில் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement