இணைய வாசிகள் தவிர்க்க முடியாத அப்ளிகேஷன் என்றால் அது வாட்ஸ் அப் தான். நண்பர்கள், உறவுகள், அலுவலக தொடர்புகள், தொழில் வாய்ப்புகள் என அனைத்திற்கும் எல்லோருமே வாட்ஸ் அப் பயன்படுத்த வேண்டி உள்ளது.
இதில் குழுவாகவும், தனி நபராகவும் சேட் செய்யும் வசதி உள்ளது. இருந்தாலும் சமயங்களில் வேண்டாத ஃபார்வேர்ட் மெசேஜ்களை தனியாகவும், குழுவிலும் தட்டிவிட்டு இம்சை கொடுக்கும் இம்சை அரசர்களும் வாட்ஸ் அப்பில் நிறைந்திருப்பார்கள். அவர்களது இம்சையிலிருந்து தப்பிக்க வாட்ஸ் அப்பில் ‘மியூட்’ செய்யும் வசதி உள்ளது. இருந்தாலும் அது எட்டு மணி நேரம் முதல் அதிகபட்சம் ஒரு வருடம் வரை தான் பலன் கொடுக்கும்.
இந்த சூழலில் வாட்ஸ் அப் நிறுவனம் அதற்கு தீர்வு கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது வாட்ஸ் அப் பீட்டா இன்போ.
அடுத்து வரும் நாட்களில் எந்நேரமும் மெசேஜ் செய்து இம்சிக்கும் நபர் உள்ள குழுவையோ அல்லது தனி நபரின் எண்ணையோ எல்லா நேரமும் மியூட் மோடில் முடக்கி வைப்பதற்கான வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்காகவே ‘ALWAYS’ மியூட் என்ற ஆப்ஷனை கொண்டு வர வாட்ஸ் அப் முயற்சித்து வருகிறதாம். சோதனைகளுக்கு பிறகு விரைவில் இது நமது செயலில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?