அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரத்தில் உள்ள 26 வயதாகும் சிவா சந்தன் ரெட்டி என்பவர் தன்னை சினிமா தயாரிப்பாளராகக் காட்டிக்கொண்டு ஒரு லட்சத்து அறுபதாயிரம் டாலர் மோசடி செய்து, இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸில் உள்ள இர்விங்கை சேர்ந்த சிவா சந்தன் ரெட்டி கடந்த 2015 முதல் 2017 ஆம் ஆண்டுவரை கல்லூரியில் படித்துக்கொண்டிருர்ந்தார். படிக்கும்போது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு குடிமக்கள் பலரிடம் உறவுகளை ஏற்படுத்தி மோசடிகளை செய்துள்ளார். தான் திரைப்படங்களை தயாரித்து விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள வணிக முயற்சிகளின் லாபத்தில் பங்கெடுக்க முதலீட்டாளர்களைத் தேடுவதாக அவர் பாதிக்கப்பட்டவர்களிடம் பொய்யாகக் கூறினார்.
இப்படி பலரிடம் மோசடி செய்து சுருட்டிய பணத்தை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தியுள்ளார். இதனால், அவருக்கு வழங்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனையை அனுபவித்தபிறகே இந்தியாவிற்கு செல்ல முடியும் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?