'’என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்’’ - மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஐஸ்வர்யா ராய்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் நேற்று முன்தினம் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அவர் தனது ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றி சொல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். '’என்மீதும், அமிதாப் அப்பா, அபிஷேக் மற்றும் எனது அன்பு மகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பு, அக்கறை மற்றும் உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்காக நன்றி’’ என்று செவ்வாய்க்கிழமை இரவு தனது இன்ஸ்டாவில் எழுதியுள்ளார்.


Advertisement

image

மேலும், ‘’என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். உங்கள் மீது என் அன்பு எப்போதும் இருக்கும். உங்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன். உண்மையிலேயே நன்றாக இருக்க இதயப்பூர்வமாக வேண்டுகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. லவ் யு டூ ஆல்’’ என குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement

ஐஸ்வர்யா மற்றும் ஆரத்யா குணமாகி வீடு திரும்பிய நிலையில் அமிதாப் மற்றும் அபிஷேக் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement