[X] Close

ஐசிசி பேட்டிங் தரவரிசை : முதல் 2 இடங்களை தக்க வைத்த கோலி, ரோகித்

Subscribe
Virat-Kohli--Rohit-Sharma-Continue-To-Dominate-ICC-ODI-Rankings-For-Batsmen

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை தக்க வைத்தார்.


Advertisement

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், துணை கேப்டன் ரோகித் ஷர்மா 855 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தையும் தக்க வைத்துள்ளனர். மூன்றாம் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம், 4வது இடத்தில் நியூஸிலாந்தின் ராஸ் டைலர், 5ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் டு பிளசிஸ் ஆகியோர் உள்ளனர்.

image


Advertisement

பந்துவீச்சுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது 2ஆம் இடத்தை தக்க வைத்துள்ளார். முதல் இடத்தில் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் உள்ளார். 3ஆம் இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மானும், 4ஆம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸும், 5ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவும் உள்ளனர்.

image

ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமத் நபி முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தான் வீரர் இமாத் வசிம், நியூசிலாந்து வீரர் கோலின் டி கிராண்ட்ஹோம், இங்கிலாந்து வீரர் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் 2, 3, 4, 5 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர். இந்தியாவில் இருந்து ரவீந்திர ஜடேஜா 8வது இடத்தை பிடித்துள்ளார்.


Advertisement

வெளியானது ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் : விலை, சிறப்பம்சங்கள் ?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close