கர்ப்பிணி மனைவி மரணம் - எதிர்வீட்டில் பதுங்கியிருந்த கணவனை பிடித்த போலீஸ்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் 8 மாத கர்ப்பிணி பெண் மரணமடைந்த விவகாரத்தில் கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை தியாகராஜா காலணியில் வசித்து வரும் சதீஸ் என்பரவது மனைவி வனிதா (28). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், வனிதா எட்டு மாதம் கர்ப்பிணியாக இருந்தார். கணவர் கடந்த சில வருடங்களாக குடும்பத்தை கவனித்து வராத நிலையில், மூன்று ஆண்டுகளாக வனிதா தனது தாயாருடன் உசிலம்பட்டியில் வசித்து வந்தார்.

image


Advertisement

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு வந்து வனிதா தங்கியிருந்தார். கணவர் சதீஷ் முறையாக பணிக்கு செல்லாததால் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த இன்று வனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த வனிதாவின் உறவினர்கள் மரணத்தில் சந்தேககம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

அத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர். பின்னர் வனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து எதிர்வீட்டில் மறைந்திருந்த கணவன் சதீஷை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு : மதுரையில் சோகம்

loading...

Advertisement

Advertisement

Advertisement