உதகையில் முகக் கவசம் அணியாவிட்டால் ஆறுமாதம் சிறை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து தப்பிக்க கைகளைக் கழுவவேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் போன்ற பல விதிமுறைகளையும், மக்களைக் காப்பாற்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது.


Advertisement

image
ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டங்களிலும் முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பல சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமான ஊட்டியில் முகக்கவசம் அணியாவிட்டால் ஆறு மாதம் சிறை தண்டனை என அந்த மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ’’உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement