கொரோனா விவகாரத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி "23 ஆயிரத்து 475 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 13,170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மண்டலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறப்பு விகிதம் 0.80 சதவீதமாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் கொரோனாவைப் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை. பொது விநியோகத் திட்டத்தில் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றன. 4 பேர் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 50 கிலோ அரிசி கொடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் மூலம் விலையில்லாமல் உணவு மே 31-ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. விலையில்லா சர்க்கரை, எண்ணெய், உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2.71 லட்சம் பிசிஆர் கருவிகள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு இதுவரை 12.56 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா விவகாரத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் அர்ப்பணிப்போடு செயல்படுகின்றனர்" என தெரிவித்தார்.
Loading More post
வேட்பாளர் தேர்வில் மிரட்டல்.. நந்திகிராம் தொகுதியில் போட்டி - அசத்தும் மம்தா பேனர்ஜி!
ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்
பவுண்டரிகள் விளாசல் - அதிரடியாக சதத்தை நோக்கி செல்லும் ரிஷப் பண்ட்!
“எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்” - கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!
பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத முரசு சின்னம் - கூட்டணியில் சர்ச்சை?
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை