எப்பொழுதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?: சென்னை மாநகராட்சி விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் கொரோனா பரவலின் ஹாட் ஸ்பாட்டாக மாறி வருகிறது சென்னை. கொரோனா தொற்றுக் கண்டறியப்படுகிறவர்களின் எண்ணிக்கையில் தற்போது வரை தமிழகத்தில் சென்னைதான் முதலிடத்தில் இருக்கிறது. அந்த வகையில் நேற்று சென்னையில் மட்டும் 380 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


Advertisement

இதனால் சென்னையில் கொரொனோ தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4,882 லிருந்து 5202 ஆக அதிகரித்தது. சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கொரோனா பரவலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையான கைகளை தூய்மைப்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.

 


Advertisement

எப்போது கைகளை கழுவ வேண்டும்


1. இருமல் அல்லது தும்மல் வந்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.

2. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.


Advertisement

3. உணவு சமைப்பதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும்.

கொரோனா பாதிப்பில் 8-ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடம் ; தாங்குமா தமிழகம்? - கமல்ஹாசன்

image

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மூதாட்டி உயிரிழப்பு

4. கழிப்பறை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவ வேண்டும்.

5. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும்.

6. கைகளில் அழுக்கு தெரியும் போது கைகளை கழுவ வேண்டும்.

7. செல்லப் பிராணிகளுடன் தொடர்பில் இருந்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.

தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 509 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement