TopNews | அச்சுறுத்தும் கொரோனா.. நெய்வேலியில் விபத்து.. சில முக்கியச் செய்திகள்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
  • தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிப்பு
  • மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59ஆக உயர்வு.அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
  • ஈட்டிய விடுப்பு ரத்து, ஓய்வுபெறும் வயது உயர்வு போன்றவற்றிற்கு கடும் எதிர்ப்பு. தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாநில அரசு ஊழியர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம்.

image


Advertisement
  • டாஸ்மாக் திறந்த முதல் நாளன்றே பல்வேறு பகுதிகளில் மோதல் சம்பவங்கள்.வீட்டை எழுதித்தர மறுத்த தாயை, மதுபோதையில் வெட்டிக்கொன்ற மகன்.
  • டாஸ்மாக் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 160 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்ததாகத் தகவல்.மதுபானம் வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் அரசு முறையீடு. 

image

  • நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து மிகப்பெரிய விபத்து.படுகாயமடைந்த 8 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி.
  • விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் நேற்றிரவு மீண்டும் விஷவாயுக் கசிவு.பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தது ஆந்திர அரசு.

image


Advertisement
  • டொனால்டு ட்ரம்ப்பின் தனி அலுவலருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.அதிபருக்கு தொற்று இல்லை என வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் விளக்கம்.
loading...

Advertisement

Advertisement

Advertisement