JUST IN

Advertisement

டிஜிட்டல் தளங்களில் வெளியானாலும் கூட.... : கொரோனாவால் ஆஸ்கர் விதிமுறையில் தளர்வு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டிஜிட்டல் (OTT) தளங்களில் வெளியிடப்படும் படங்களும் 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என ஆஸ்கர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.


Advertisement

ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். இதுவரை ஆஸ்கருக்கான பரிந்துரையில் இடம்பெற வேண்டுமென்றால் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் குறைந்தது ஏழு நாட்களுக்கு திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

image


Advertisement

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதனால் பல திரைப்படங்கள் டிஜிட்டல் (OTT) தளங்களில் வெளியாகும் நிலை உள்ளது. இதனை அடுத்து ஆஸ்கர் விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் (OTT) தளங்களில் வெளியிடப்படும் படங்களும் 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என ஆஸ்கர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

image

இது குறித்து வெளியான ராய்ட்டர்ஸ் செய்தியில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் டிஜிட்டல் (OTT) தளங்களில் வெளியிடப்படும் படங்களும் 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

தடையை மீறி செயல்பட்ட 2 வங்கிகளுக்கு சீல் - உள்ளே சிக்கிய ஊழியர்களால் பரபரப்பு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement