குன்னூரில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை - விரக்தியில் விபரீத முடிவு?.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மதுரையை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் சம்பத் குமார் (20). இவரது தாயார் கவிதா. சம்பத் குமார் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ தேர்வில் தேர்ச்சி பெற்று ராணுவத்தில் சேர்ந்தார். இவர் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் எம்.ஆர்.சிஅவாஹில் ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ராணுவ முகாம் முழுமையாக சீல் வைக்கப்பட்டது. இதனால் பயிற்சி பெறும் இளம் ராணுவ வீரர்கள், முகாமை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

image


Advertisement

“ஸ்டாலின் மலிவான அரசியலை கைவிட வேண்டும்” : சுகாதாரத்துறை அமைச்சர்

இதனைத்தொடர்ந்து வெளியே செல்ல முடியாத நிலை இருந்ததால் இளம் ராணுவ வீரர் சம்பத் குமார் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை சம்பத் குமார் ராணுவ முகாமை விட்டு வெளியேறி விட்டார். எங்கு தேடியும் அவரை காணவி்ல்லை.

image


Advertisement

“தப்பித்துச் செல்லவும் முடியவில்லை; உணவுக்கும் வழியில்லை” - சரணடைந்த கொலைக் குற்றவாளிகள்

இந்த நிலையில் குன்னூர், உதகை தேசிய நெடுஞ்சாலையில் பிளாக் பிரிட்ஜ் அருகே சம்பத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ராணுவ அதிகாரிகள் வெலிங்டன் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement